பல்லவியும் சரணமும் - 16
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. எங்களுக்கு அன்பு செய்ய யாருமில்லையே...
2. முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது, அந்த கொடி ஆடினால் இந்த இடை தாங்குமா? ...
3. இனிமை நினைவும் இளமை வளமும் கனவாய் கதையாய் முடியும்...
4. தோள்களில் நீ அணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க ...
5. ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன? ...
6. நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம் மலர்க் கூந்தல் ஓரம் இளைப்பாற ...
7. நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை பேசும் ...
8. புன்னகையாலே எனை மாற்று பொன்னழகே நீ பூங்காற்று ...
9. தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் ...
10. பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல, எனக்கு அதிகாரம் இல்லையம்மா ...
11. வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன் ...
12. சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும், சிலை போல சாய்ந்தால் கலை ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
10 மறுமொழிகள்:
நான் எழுத தொடங்கும் முன் ஜெயஸ்ரீ முந்திட்டாங்க. ஆனாலும் பிரச்சனையில்லை.
2. தங்கத்தில் முகமெடுத்து..
3.அமுதை பொழியும் நிலவே..
7. மன்னிக்க வேண்டுகிறேன்..
9. மாலை பொழுதின் ..
12. sumaithangi saaynthaal
5. கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
6. நினைவாலே சிலை செய்து ???
8 ஒரு நாள் உன்னோடு ஒருநாள்
12 சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
Jsri, Rosavasanth, chandra and Arul,
intha speed thAngkAthuppA :-) In just 1.5 hrs, 11/12 pallavis have been found out by YOU all!!!
Great going! Thanks and keep it up!
Arul,
The pallavi for item 6 is wrong. The correct answer is
"pOy vA nathiyalaiyE, ivaL pUssUtum nAL pArththu vA" from an MGR movie (?)
enRenRum anbudan
BALA
அடடா! நம்ம மக்கள் ரொம்ப பாஸ்டா இல்ல இருக்காங்க. நான் ஏதாவது எழுதலாம்னு விசைப்பலகையில கைவைக்கறதுக்கு முன்னாடி கேம் ஒவர்.
அத விடுங்க. வச்ந்த,தெய்வமே,நீர் தமிழ்ப் திரைப்பாடல் பல்கலைகழகமா, அது எப்படி, எல்லா பல்லவியும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பிரில்லியண்ட் சாமி!!
கொஞ்சமே குழந்தையை கொஞ்சியதுபோக வெட்டியாக இருப்பின், இளையராஜாவின் அதிகமாய் அறியாத ஆனால் சுவையான பாடல் கலெக்ஷனை போடுங்கள். நானும், மக்களும் அனுபவித்து போவோம்.
Narain,
//
கொஞ்சமே குழந்தையை கொஞ்சியதுபோக வெட்டியாக இருப்பின், இளையராஜாவின் அதிகமாய் அறியாத ஆனால் சுவையான பாடல் கலெக்ஷனை போடுங்கள். நானும், மக்களும் அனுபவித்து போவோம்.
//
Is this for me or Rozavasant? Pl. clarify
enRenRum anbudan
BALA
மன்னிக்க பாலா. அது வசந்திற்கு!
ஐயா ரோசாவசந்த்,
சந்தோஷமான விஷயத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாதா? வாழ்த்துக்கள்!
புரட்சிக்காரருக்கு மகனா, மகளா? இனி சில காலம், எழுத / தூங்க நேரம் கிடைப்பது அரிது :-)
என்றென்றும் அன்புடன்
பாலா
பாலா, ஜெய்ஸ்ரீ, மிகவும் நன்றி.
மகன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது, போன வாரம்தான் துணைவியும், மகனும் என்னுடன் சேர்ந்துகொண்டார்கள்.
ஆமாம், ஒரு வாரமாய் தூக்கம் இல்லைதான். அதற்காகதானே மூன்று மாதமாய் காத்திருந்தேன். ஒரு வாரமாய் வலைப்பதிவுகளை படிக்க கூட முடியவில்லை. உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி!
Test comment ...
Post a Comment